எனது பிறந்த நாள் கேக்
இலங்கை இராணுவம் தமிழ் மக்கள் மீது பலவிதமான முறையில் இன அழிப்பை மேற்கொண்டது யாவரும் அறிந்ததே. அதில் ஒரு புதிய விடயத்தை இப்போது பகிர்ந்து கொள்கின்றேன். 1990 - 1995 ஆண்டுவரை யாழ்ப்பாணம் புலிகளின் ஆளுமைக்குட்பட்டு இருந்தது.
அப்போது நான் 5 ஆம் வகுப்பு கல்வி கற்றுக் கொண்டிருந்தேன். இலங்கை அரசாங்கத்தினால் மின்சார,
பொருளாதாரத தடைகளையும் விதிக்கப்பட்டுருந்தது. மாதம் ஒருமுறை இலங்கை அரசாங்கத்தினால் அனுப்பப்படும் உணவே அனைவருக்கும் பகிரப்படும். நான் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரீட்சை சித்தியடைந்தேன். இதனால் எனது குடும்பத்தினர் மகிழிச்சி அடைந்ததுடன், எனது பிறந்த நாளை விமர்சையாக கொண்ட்டாட முடிவு செய்தனர்.
பொருளாதாரத தடைகளையும் விதிக்கப்பட்டுருந்தது. மாதம் ஒருமுறை இலங்கை அரசாங்கத்தினால் அனுப்பப்படும் உணவே அனைவருக்கும் பகிரப்படும். நான் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரீட்சை சித்தியடைந்தேன். இதனால் எனது குடும்பத்தினர் மகிழிச்சி அடைந்ததுடன், எனது பிறந்த நாளை விமர்சையாக கொண்ட்டாட முடிவு செய்தனர்.
மிக சந்தோசத்துடன் பாடசாலைக்குப் போனேன். பாடசாலை ஆரம்பித்து 15 நிமிடங்களில் வானில் இலங்கை அரசாங்கத்துக்குச் சொந்தமான இரண்டு விமானங்கள் பாடசாலையை அண்டி வானில் வட்டமிட்டுக் கொண்டிருந்தது. இதனால் மாணவர்களும், ஆசிரிகளும் கால் போன போக்கில் ஓடினார்கள். நான் தனியே எங்கே ஓடுவது என்று தெரியாது அழுது கொண்டிருந்தேன். விமானத்திலிருந்து பாரிய சத்தத்துடன் ஒரு குண்டு விழுந்த்தது. உடனே அருகிலுள்ள வீடுக்குள் ஒழித்துக் கொண்டேன். அங்கு யாரும் இருக்கவில்லை. அடுத்த குண்டுச் சத்தம் என் நெஞ்சைப் பிளந்ததுடன் மிக அருகில் விழுவதுபோல் உணர்ந்தேன். எனவே என்ன நடந்தாலும் வீட்டிற்கு போவது என முடிவெடுத்தேன். வீட்டை நோக்கி ஓடினேன். நான் எனது வீட்டை நெருங்கிக் கொண்டிருக்கையில் நான் ஒருபோதும் < பார்த்திராத ஒரு நபர் வெள்ளை ஆடை அணிந்து மிக அழகாக நின்றுகொண்டிருந்தார். அவர் வந்த வழியாலே திரும்பி ஓடு தம்பி எனக் கூறினார். நான் எனக்கு அருகில் நின்றவரிடம் இவ்வழியால் போகவேண்டாமாம் எனக் கூறினேன். அவர் யார் உனக்கு சொன்னது இங்கு உன்னையும் என்னையும் தவிர யாருமேயில்லை. நீ சின்னப் பெடியன் உனக்கு என்ன தெரியும் நீ பயத்தில் ஊளராதே என்னுடன் வா என்றார். நான் முடியாதெனக் கூறி வந்த வழியால் திரும்பி ஓடிவிட்டேன். ஓடி சிறுது தூரத்தின் பின்னர் ஒரு குண்டுச் சத்தம் கேட்டது. அந்த மனிதர் போன பாதையில் விழுந்தது. அவர் இறந்துவிட்டார். அக்குண்டுகளுடன் இலங்கை அரசாங்கத்தால் சிங்களவர்களின் மலக் கழிவுகளை பெரிய கொள்கலன்களில் அடைத்து வீசுவது வழக்கம். இப்போதும் அதே பாணியில் தமிழ் கட்சி வேட்பாளர்களின் வீடுகளின் மீது மலக் கழிவுகளை வீசுவதும், நாய் களின் தலைகளை வெட்டி வீசுவதும் தாராளமாக நடை பெற்றுவருகிறது. ஒருவாறு எனது குடும்பத்தைக் கண்டுபிடித்தேன் எனது வீட்டின் ஒருபகுதி சேதமுற்று இருந்தது. வீட்டுக்குள் நுழைந்தோம் எனது பிறந்த நாளுக்கு செய்த உணவுப் பண்டங்கள் அனைத்தும் மலக் கழிவுகளால் நிறைந்திருந்ததுடன் மகா துர்நாற்றம் வீசியது. அன்றிலிருந்து எனது பிறந்த நாளை நினைத்தால் , அருவருப்புடன் எனக்கு சத்தி வருகிறது. இந்நிகழ்வானது எனது வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வாக உள்ளது .
Subscribe to:
Post Comments
(
Atom
)
வேதனை.
ReplyDeleteவேதனை.
ReplyDeleteRathnavel@@@@ஐயா உங்களது வருகைக்கும் உணர்வுக்கும் தங்களது கருத்துக்கும் நன்றி#
ReplyDelete